Tuesday, July 14, 2015

புத்துயிர் பெற்றெழும் சுற்றுலாத் துறை

இந்நாட்டின் முன்னேற்றத்தைத் தடைசெய்து மக்களை அழிவுப் பாதைக்கு இழுத்துச் சென்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருட பூர்த்தியையும் அடைந்துவிட்டது. நாட்டின் மக்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக விளங்கிய யுத்தம் முடிவடைந்த மையின் பயனாக இன்று எவரும் எந்தவொரு இடத்துக்கும் சென்றுவரக் கூடிய அச்சமற்ற நாடாக எமது நாடு திகழ்கின்றது. இதன் பயனாக இன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வை மற்றும் புலம் பெயர் எங்கள் சொந்தங்களின் வருகையும் எமது நாட்டின் மீது விழுந்துள்ளது. 


எமது நாட்டின் அரசியல் வரலாற்றுடன் இணைந்த நினைவுச் சின்னங்களாக விளங்கும் பழைய காலத்து மன்னர்களின் கோட்டைகள், அதன் இடிபாடுகள், சிற்பங்கள், கல் ஓவியங்கள், நீர் வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகள், தாவரவியல் பூங்காக்கள், மிருகக் காட்சி சாலைகள், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் காலத்து கட்டடங்கள், கண்டி தலதா மாளிகை, அதன் வருடாந்த பெரஹரா, கதிர்காமம் ஆலய வைபவம், திருகோணமலை ஆலயம், ஆகிய மதம் சார்ந்த வைபவங்களும், யால, வில்பத்து, வஸ்கமுவ, குமண போன்ற பிரதேசங்களும், மயில், மான், யானை, பறவைகள் உட்பட பல்வேறு வகைப்பட்ட வனஜீவராசிகளும், தூபிகள், மற்றும் சிகிரியா, ஹிக்கடுவ கடலின் கீழ் காணப்படும் பவள மலைகள், இப்பூமியின் பத்தில் ஒன்பது நிலப் பரப்பிலிருந்து பெறப்படும் மாணிக்கக் கற்களும் சுற்றுலாவில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. எமது நாட்டைச் சுற்றியுள்ள கடலின் கரைப் பகுதியில் நான்கில் மூன்று பகுதி வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.இவையனத்தும் பெரும்பாலும் தென் மற்றும் மத்திய இலங்கையிலேயே காணபடுகின்றன. இவற்றை காண்பதற்கு புலம்பெயர் சொந்தம்களுக்கு ஆர்வம் உள்ள போதும் சரியான பயண ஏற்பாடுகள் இன்மையால் காண இயலாது உள்ளனர்
இவர்களின் தென், மத்திய இலங்கை பயணத்துக்கு எதிர்னோக்கும் மறைமுகமான சவால்களாக பயணிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு, தனிமையில் இருக்கும் சுற்றுலாப் பயணி களவு, கொள்ளைகளுக்கு முகம் கொடுத்தல், ஏமாற்றுதல், சூழ்ச்சி (அதியுயர் பயணக் கட்டணத்தை அறவிடல், பொருளுக்கான விலையைக் கூட்டி விற்றல்) இலங்கையின் எழிலை இரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தல், அனுமதியற்ற வழிகாட்டல், பொய்யான தகவல்களை வழங்குதல், இலங்கையின் புகழ்ச்சிக்கு பங்கம் விளைவித்தல், பலவந்தமாக பொருட்களை விற்க முற்படல், முச்சக்கர சாரதிகள் போன்றோர் தகாத பயணங்களை மேற்கொள்ள வற்புறுத்தல், சுற்றுலாப் பயணி விருப்பங் கொள்ளாத போது வழிகாட்டுதலுக்கு தன்னிச்சையாக முன்வருதல், பலவந்தமாக பணம் கேட்டு மிரட்டல் போன்ற பல சவால்களுக்கு உல்லாசப் பயணிகள் முகங்கொடுப்பதால் புலம்பபெயர் சொந்தங்கள் இப்படியான தென், மத்திய இலங்கை பயணம்களை தவிக்கின்றனர்.
இதை நோக்கமாக கொண்டே ஜே ஜே ரவல்ஸ் அண்ட் ரூர்ஸ் எமது நாட்டின் அறிவு சார் சொத்துரிமைகளும், முன்னோரின் ஆற்றல்மிக்க சேமிப்புகளுமான மதத் தலங்கள், தூபிகள், நகரங்களில் காணப்படும் பழங்காலத்து கட்டடங்கள், மலைகள், நதிகள், கல் ஓவியங்கள், சிலைகள், மரவேலைப்பாடுகள், என அனைத்தையும் கூட்டி சென்று காண்பிப்பதிலும் அதற்கான வாகன மற்றும் தங்குமிட வசதி என்பனவும் மிக குறைந்த விலையில் ஏற்பாடு செய்வது மட்டுமல்லாது உங்களது பயணம் ஆபத்து அற்றதாகவும் மனநிறைவாகவும் இருக்க வழி செய்வார்கள். எமது வழிகாட்டிகளுக்கு  தமிழ், ஆங்கிலம், சிங்களம் மொழிகளில் நன்கு பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். இதனால் நாட்டின் எந்த பகுதியிலும் எந்தவொரு அசெளகரியமற்ற பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment